திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர்-ராமதாஸ்

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் (ஆப்பு வைத்தனர் என்று பொருள்) என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மாநாடு அந்த நகரில் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,


தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள ஜாதிகளில் வன்னியர்கள் தான் அதிகம்.


ஆனால் இட ஒதுக்கீடு, மற்றும் வேலைவாய்ப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் வன்னியர்கள் இருந்து வருகின்றனர். எனவே தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் (ஓஹோ) .


இதனால் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக தைலாபுரத்தில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி கோவிலை உருவாக்கி வருகிறோம். இதில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள இலவசமாக கல்வி வழங்கி வருகிறோம். (அப்படியா சொல்லவே இல்லை...ம்ம்ம்ம்)


ஆனால் தமழகத்தில் வன்னியர்கள் ஏமாற்றபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நான் 1980ல் இருந்து தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.


குறைந்த மக்கள் தொகை உள்ள ஜாதியினர் தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் நமது ஜாதியினர் அதிகமாக இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டனி அமைத்து கொண்டு திட்டமிட்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடாமல் செய்து விட்டனர். இதனால் தான் நாங்கள் 7 இடங்களிலும் வெற்றி பெரும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.


ஆனாலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்தும் பாடுபடுவோம் (செம காமெடி..போங்க)என்றார் ராமதாஸ்.
--------------------------------------------------
எந்தக்காலத்திலாவது திமுகவும், அதிமுகவும் கூட்டு சேருமா? இதற்கு முன்தான் சேர்ந்ததாக ஒரு வரலாறு உண்டா? 


தேர்தலுக்கு தேர்தல் சுயலாபத்துக்காக அடிக்கடி கூட்டணி மாறும் குரங்கு புத்தியால்தான் பாமக தோற்றது.


2 கோடி வன்னியர் இருந்தும் இவர் வெற்றி பெற முடியவில்லையே. ஏன்?.  வன்னியர்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்ததால்தான் வன்னியர் ஓட்டுக்கள் அனைத்தும் பாமகவைத் தவிர இதர கட்சிகளுக்கு சென்றது என்கிற உண்மை இன்னமும் இவருக்கு புரியவில்லை என்றால் என்ன செய்வது ?.


டாக்டர் ராமதாஸ் இனியாவது இப்போதிருக்கிற சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு நடந்தால் பாமகவிற்கு நல்லது. அல்லது வீம்பு பிடித்து கொண்டிருந்தால் இருக்குற நிலைமை இன்னும் மோசம்தான் ஆகும்.     


பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்குதோ , அதிமுக ஜெயிக்குதோ...பாமக சொல்லும்படியான ஓட்டுக்களைப் பெற்றால்தான் பாமகவிற்கு எதிர்காலத்தில் கொஞ்சம் மதிப்பு மரியாதை இருக்கும். இல்லையேல் அழிவுதான்.


பிற கட்சிகளையும் , ஆளும் திமுக அரசினை தரம் தாழ்ந்தும், தமிழக அரசு முன் எடுத்துவைக்கும் நல்ல திட்டம் முதற்கொண்டு எல்லாவற்றையும் விமர்சனம் செய்யாமல், வீண் குற்றசாட்டும் சுமத்தாமல் நாளொரு அறிக்கையும், பொழுதொரு பேட்டியும் தராமல், முதலில் தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். 


சாதி என்ற அடிப்படையைத் தவிர்த்து மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து அதன்படி செயல்பட்டால், தப்பிக்கலாம்.


இல்லையேல் "அடி மேல் அடிபட்டால் அம்மியும் நகரும்" என்பதைப்போல "தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு பாமக கரைந்து காணாமல் போகும்".

Posted by போவாஸ் | at 12:21 PM

1 கருத்துக்கள்:

Kolipaiyan said...

Nice post & comments.

Hereafter Ramadoss will decide which is best way of his party. If not, public will through him out of politics.

Post a Comment

Related Posts with Thumbnails