செக்ஸ் புகாரால் பதவி இழப்பு என்.டி.திவாரி ஓட்டம்
செக்ஸ் புகாரால் பதவி இழந்த முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி சப்தமின்றி நேற்று அதிகாலை ஆந்-திராவில் இருந்து வெளியேறினார்.
ஆந்திர ஆளுநராக பதவி வகித்த என்.டி. திவாரி ஆளுநர் மாளிகையில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் சாற்றப்பட்டது. இதுதொடர்பாக சில படங்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து என்.டி.திவாரி பதவி விலகினார். உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவருடைய பதவி விலகல் ஏற்கப்பட்டு சட்டீஸ்கர் மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் லட்சுமிநரசிம்மன் ஆந்திர ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. லட்சுமி நரசிம்மன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை அய்தராபாத் வந்து நேற்று காலை பதவி பொறுப்பை ஏற்பதாக முடிவானது.
லட்சுமி நரசிம்மன் வருவதற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக அய்தராபாத்தில் இருந்து புறப்பட்டு செல்ல திவாரி திட்டமிட்டார். ஆனால் அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து பகல் நேரத்தில் வெளியே வந்தால் மகளிர் அமைப்புகள் அவருடைய காரை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் விமானநிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவாரி தனது பயண திட்டத்தில் மாற்றம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சப்தமின்றி அய்தராபாத்தில் இருந்து புறப்பட்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால் அந்த திட்டத்திலும் சிக்கல் எழுந்தது. அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகிவிட்டு செல்வதால் ‘கார்டு ஆப் ஆனர்’ எனப்படும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மரியாதையை சூரிய உதயத்துக்கு முன்பாகவோ சூரிய மறைவிற்குப் பின்போ வழங்க முடியாது. இதனால் அவர் அதிகாலையில் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பயணம் தள்ளி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு அவ-ருக்கு வழியனுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு முதல் அமைச்சர் ரோசய்யா, தலைமை செயலாளர் ரமாகாந்த் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் திவாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வழியனுப்பினார்கள்.
பின்னர் நேற்று அதிகாலையில் திவாரி சப்தமின்றி காரில் விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
கடைசிவரை அவருடைய இந்த பயண திட்டம் கமுக்கமாக வைக்கப்பட்டு இருந்தது. முன்னதாக ஆளுநர் மாளிகையில் இருந்த அவருக்கு சொந்தமான பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டன

Posted by போவாஸ் | at 5:18 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails