திருப்பதி ஏழுமலையானுக்கு ரஹ்மான் இசை அமைக்கக் கூடாது! - இந்து முன்னணி

eventsimg
திருப்பதி ஏழுமலையான் பற்றிய பாடல்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்கக் கூடாது என இந்தி முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோயில் திறக்கக் கூடாது!

ஆங்கில புத்தாண்டு பிறப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களும் கொண்டாடலாம்.  

இந்து கோவில்களை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை சிவராத்திரி விழாவைத்தவிர வேறு எந்த நாளிலும் கோவில்களை நள்ளிரவில் திறப்பதும் இல்லை. அபிஷேகம், பூஜை, தீபாராதனை என்று எதுவும் நடைபெறுவதும் இல்லை.

ஆனால் வருகிற டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டுக்காக சில இந்து கோவில்களை திறக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம்..." என்றார் வெள்ளையப்பன்.
-----------------------------------------------
ஜாதி, மதம் என வேறுபாடுகள் இல்லாதது கலை. அதில் இசையும் ஒன்று. 

உலகமே பாராட்டும் ஏ.ஆர்.ரகுமானிடம் திருப்பதி ஏழு மலையான் பற்றிய பாடல்களுக்கு இசையமைக்கும்படி திருப்பதி தேவஸ்தான போர்டு தான் கேட்டுக் கொண்டது. இசை அமைக்க வாய்ப்பு தருமாறு ஏ.ஆர்.ரகுமான் தேவஸ்தானத்திடம் கேட்கவில்லை. 

இசை அமைக்கக் கூடாது என்று ஏ.ஆர்.ரகுமானை எதிர்ப்பதை விட்டு விட்டு, வெள்ளையப்பன் அவர்களுக்கு தைரியமிருந்தால் திருப்பதி தேவஸ்தானம் போர்டிடம் முட்டி மோதி வேறு ஒரு நல்ல இந்து இசைக் கலைஞரிடமே இசை அமைக்க முயற்ச்சிக்கலாமே. முடியுமா இவரால் ?.

எல்லாவற்றிலும் ஜாதி, மதம் என்ற வேற்றுமையைக் கண்டு ஒற்றுமையை சீர்குலைக்கும், இந்த வெள்ளையப்பன் போன்றோரை மடையப்பன் என்று சொன்னாலும் தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன்.

Posted by போவாஸ் | at 12:52 PM

1 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails