திரைப்படத் துறையினர் நலவாரியம்:சிவக்குமார், குஷ்புக்கு பொறுப்பு: கலைஞர் அறிவிப்பு!


முதலமைச்சர் கலைஞர் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாநாட்டில் 9.10.2009 அன்று  கலந்து கொண்டு உரையாற்றிய போது, “தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில், தமிழ்த் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்கள் உழைப்பை நாளும் அளித்திடும் கலையுலகத்தினரின் நலன்களுக்காகத் தனி நலவாரியம் அமைக்கப்படவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ்த் திரையுலகின் சார்பிலும் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசு சின்னத்திரையினருக்கும் சேர்த்து “திரைப்படத் துறையினர் நலவாரியம்” ஒன்றினை புதிதாக உருவாக்கும் என்று அறிவித்தார்.  

      அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, இன்று (15.12.2009) முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திரைப்படத்துறையினர் நலவாரியத்தைப் பின்வருமாறு அமைத்து ஆணையிட்டுள்ளார்.



தமிழக செய்தித்துறை அமைச்சர் தலைவர், செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் உறுப்பினர், மற்றும் செயலாளர் அலுவல்சாரா உறுப்பினர்கள்: 


வி.சி.குகநாதன் பெப்சி தலைவர்  அபிராமி ராமநாதன் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர். ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம் தயாரிப்பாளர்.

நடிகர் சிவகுமார், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் கோவை தம்பி, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் வாகை சந்திரசேகர். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் அன்பாலாயா” பிரபாகரன், தயாரிப்பாளர் (சின்னத்திரை) சத்யஜோதி” டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை.

மேலும், செய்தித் துறை, நிதித்துறை, வருவாய்த் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய அரசுத் துறைகளின் செயலாளர்களும்; தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலநிர்வாகத் துறை ஆகிய துறைகளின் ஆணையர்களும் வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்/

Posted by போவாஸ் | at 3:54 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails