விஜயகாந்துக்கு ரசிகர்கள் 100 பேர் கூட இல்லை :
“ 2005 ஆம் ஆண்டின் கணக்குப்படி புரட்சி கலைஞருக்கு உள்ள ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். இது மட்டும் அல்லாது இலங்கை, கனடா, லண்டன் மற்றும் பல்வேறு நாடுகளில் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழநாடு தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ரசிகர் மன்றங்கள் உண்டு. ” என்று அவரது தேசியா முற்போக்கு திராவிட கழகம் இணைய தளம் சொல்கிறது.
இதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவென்றால் அவருக்கு இருக்கும் 45 ஆயிரம் ரசிகர் மன்றங்களில், ஒவ்வொரு மன்றத்திலும் 100 பேர் கூட இல்லை. ஒரு ரசிகர் மன்றத்துக்கு 100 பேர் என்று எடுத்துக் கொண்டால் மொத்தம் உள்ள 45 ஆயிரம் ரசிகர் மன்றங்களில் உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக இருக்க வேண்டும்.
45 லட்சம் ரசிகர்கள் என்பது 45 லட்சம் வோட்டுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். சிறுவர்கள், வோட்டு போடாதவர்கள் என்று கூட்டி கழித்து பார்த்து ஒரு ஐந்து லட்சத்தை கழித்தால் 40 லட்சம் வோட்டுக்களாக இருந்திருக்க வேண்டும். 40 லட்சம் வோட்டுகளும் இவருக்கு விழுந்திருக்க வேண்டும்.
ஆனால், நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் தே.மு.தி.க வாங்கிய வோட்டுக்கள் 31,26,740 மட்டுமே.
தொகுதி வாரியாக வாங்கிய வோட்டுக்களின் பட்டியழ்க் காண …..க்ளிக் செய்யவும். http://www.dmdkparty.com/new_update/download/vote.pdf
இதிலிருந்து தெரியும், புரியும், நாம் அறியும் உண்மை என்ன வென்றால் கிட்டத்தட்ட 10 லட்சம் ரசிகர்களின் வோட்டுகளே அவருக்கு விழவில்லை.
ஆக ரசிகர்களின் வோட்டுக்களையே முழுமையாக இன்னும் விஜயகாந்த் பெறவில்லை.
Posted by போவாஸ்
|
at
12:10 PM
0 கருத்துக்கள்:
Post a Comment