விஜயகாந்தின் அற்பப்புத்தி…
11 Aug 09 விஜயகாந்தின் அற்பப்புத்தி…
விஜயகாந்தின் அற்பப்புத்தி…
” முதல்வர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவருக்குச் சொந்தமான மருத்துவமனயில் 70 அறைகளில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பேட்டிகள் உள்ளன என்று நான் பேசினேன். அதற்கான புகைப்பட ஆதாரங்ககளையும் காட்டினேன்.
இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த மருத்துவமனை என்று சொன்னால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
அந்த டீவிக்களைக் கொடுத்த அதிகாரிகளுக்கு அது எந்த மருத்துவமனை என்று தெரியாதா ? கொலை, கொள்ளைக் குற்றங்ககளைக் கண்டுபிடிக்கும் திறமையான தமிழக போலீசை வைத்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே ? “
- என்று ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.
விஜயகாந்து இலவச வண்ணத் தொலைக்காட்சி பேட்டிகள் குறித்து ஒரு புகார் சொன்னபோது
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் - பொறுப்புணர்ச்சியுடன் - அவருக்கு பதிலளித்தார்.
“எந்த மருத்துவமனை என்று பெயர் குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் வசிக்கும் பதவியின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பதிலளித்தார் முதல்வர் !
விஜயகாந்துக்கு தெரியுமா கற்பூர வாசனை ?.
“நான் சினிமாவில் மட்டுமல்ல, யதார்த்த வாழ்க்கையிலும் பஞ்ச டயலாக்தான் அடிப்பேன்; அரசியலைப் பொறுத்தவரையில் நான் ஓர் அரைவேக்காடுதான்” என்று சொல்லாமல் சொல்வதுபோல
ஒரு முதலமைச்சருக்கு பதிலளிக்கிறோம் என்ற
மரியாதை கூட இல்லாமல் -
நாகரீகமில்லாமல்
சந்து முனை சிந்து பாடும் பேர்வழி போல வழக்கம் போல
அரட்டைக் கச்சேரி நடத்தியிருக்கிறார்.
அரசியலில் புகார்கள் - குற்றச்சாட்டுகள் கூறுவது புதிது அல்ல.
ஆனால், புகார் கூறுபவர்கள் “இது எங்கே நடந்தது ? யார் காரணம் ?” என்று பகிரங்கமாப் பெயர் சுட்டிப் புகார் கூறுவதுதான் வழக்கம்.!
ஒரு மருத்துவமனையில்
அரசு வழங்கிவரும்
இலவச கலர் டிவிக்கள் 70
இருக்கின்றன என்று சொல்லத் தெரிகிறது.
அதற்கான
புகைப்பட ஆதாரங்ககளை
காட்டுவேன்
என்று சொல்லத் தெரிகிறது.
ஆனால் -
” அது எந்த மருத்துவமனை
என்று கூறுங்கள்,
நடவடிக்கை எடுப்பேன்”
என்று மாநிலத்தின் முதல்வர் கேட்டால்
- மருத்துவமனை எது
என்று பெயர் சொல்ல
விஜயகாந்தை
எது தடுக்கிறது ?.
மருத்துவமனை தெரிகிறது. அங்கே அரசு கலர் டிவிக்கள் 70 இருப்பது தெரிகிறது. அதற்கான புகைப்பட ஆதாரம் தெரிகிறது.
ஆனால் - அந்த மருத்துவமனை எது? என்று கேட்டால், அதை நான் சொல்ல மாட்டேன். அதிகாரிகள் மூலம் கண்டுபிடியுங்கள், போலீஸார் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் - என்று கூறுவதை
அகம்பாவம் என்பதா? அலட்சியம் என்பதா? ஆணவம் என்பதா? அறியாமை என்பதா?
வைகைப் புயல் வடிவேலு மீது அவரது வீட்டு முன்பு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வெறியாட்டம் ஆடிய பொது - வடிவேலு போலீசில் புகர் கொடுத்தார்.
எப்படி ?
எழுத்து மூலம் புகார் கொடுத்தார்.
அப்போது, நீங்களும் போலீஸ் நிலையம் சென்று வடிவேலு மீது புகார் கொடுத்தீர்களே;
அப்போது - உங்களது புகார்களை வாயாலா சொன்னீர்கள் ?
எழுதித் தரவில்லையா ?.
அப்படியானால் போலீசில் வைகை புயல் மீது புகார் கொடுக்க வேண்டும் என்றால் - அந்த புகாரை போலீசாரிடம் எழுத்து பூர்வமாகத் தந்தால்தான் அவர்கள் வழக்குப்பதிவு செய்வார்கள் - என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கிறது.
அனால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எழுதி கொடுங்கள் என்று கேட்கவில்லை ;
மருத்துவமனையின் பெயரை சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னால் மட்டும் -
பெயர் சுட்டிக் காட்டி சொல்ல முடியாதோ ?
போலீஸ் நிலையத்தில் தெரிந்த புத்தி
இப்போது முதல்வர் கேட்டால்
வேலை செய்ய மறுக்கிறது என்றால்
அது என்ன புத்தி ?. அற்பப்புத்தி என்பது தவிர வேறு என்ன ?
0 கருத்துக்கள்:
Post a Comment