பட்டியலிடத் தயாரா ?
பொதுவாக ஒருவர் மற்றவரின் குற்றங்களை தெரிவிக்கும்போது முதலில் தான் ஒரு குற்றமில்லாத நபராக இருக்க வேண்டும். தன தகுதியை சரி பார்க்கவேண்டும். தகுதி இருந்தால் மட்டுமே மற்றவரைப் பற்றி கூற வேண்டும். இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். நம்ம தே.மு.தி.க தலைவரும் இப்படிதாங்க. அவருக்குத்தான் எல்லாம் தெரிந்த மாதிரியும், மற்றவங்க ஒன்னுத்துக்கு உதவாத மாதிரியும், அவர்தான் மக்களுக்கு நிறைய செஞ்ச மாதிரியும் மற்றவங்க மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத மாதிரியும் சும்மா வாய்க்கு வந்ததை லூசு மாதிரி உளறி கொட்டிகிட்டு இருக்கார். இவரெல்லாம் என்னன்னு சொல்றது?. சமீபத்துல இவரு, நம்ம முதல்வர் கருணாநிதியின் தி.மு.க கட்சி மக்களுக்கு என்ன நன்மை செய்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு, நமது கலைஞர், முதல்வர், திரு. கருணாநிதி அவர்களும் தே.மு.தி.க தலைவரின் பாணியிலேயே தி.மு.க கட்சி மக்களுக்கு செய்த நன்மைகளைப் பட்டியலிட்டு விஜயகாந்துக்கு நெத்தியடி பதிலைக் கொடுத்து விட்டார். இப்பொழுது நம் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு இந்த விஜயகாந்த் பதில் சொல்வாரா ? திடீர் இட்லி,திடீர் சட்னி, திடீர் சாம்பார் மாதிரி திடீரென்று கட்சி ஆரம்பித்த காரணம் என்ன ? எந்த ஒரு சுய சிந்தனையும், திராவிட சிந்தனையும், முற்போக்கான சிந்தனையும் இல்லாத நீங்கள் உங்களது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கட்சி என பெயர் வைக்க காரணம் என்ன ? கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் தி.மு.கவைப் பார்த்து காப்பி அடித்து வைக்க காரணம் என்ன ? கட்சியின் கொள்கைகள் என்ன?. கட்சியின் திட்டங்கள் என்ன ?. கட்சியின் முற்போக்கு சிந்தனைகள் யாவை ? ஜாதி பாகுபாடின்றி அனைவருக்கும் சம அந்தஸ்து உமது கட்சியில் உண்டா? 2006 முதல் விருத்தாச்சல சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நீங்கள் உங்கள் தொகுதிக்கு செய்த காரியங்கள் யாவை?. பட்டியலிட முடியுமா ? கடந்த மூன்றையாண்டு காலமாக எம்.எல்.ஏவாக இருக்கும் உங்கள் தொகுதிக்கு செய்த நன்மைகள் என்னென்ன ? பட்டியலிட முடியுமா ? சட்ட மன்ற தேர்தலின் போது விருத்தாச்சல தொகுதி மக்களுக்கு, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் கொஞ்சமாவது நிறைவேற்றுநீரா ? பட்டியலிட முடியுமா ? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா ?.பட்டியலிட முடியுமா ? விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை நகராட்சிகள் உள்ளன என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை கிராமங்கள் உள்ளன என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியின் மக்கள்தொகை எவ்வளவு என்று தெரியுமா? விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியின் மொத்த பரப்பளவு எவ்வளவு என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியில் உள்ள கிராமங்களில் எத்தனை கிராமங்கள் முழுமையாக சாலை வசதிகள் உள்ளன என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியில் எவ்வளவு விவசாய நிலங்கள் உள்ளன என்று தெரியுமா?. விருத்தாச்சலத் தொகுதியில் எவ்வளவு தரிசு நிலங்கள் உள்ளன என்று தெரியுமா?. மூன்றரை ஆண்டு காலமாக எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீட்டில் நீங்கள் தமிழக அரசிடமிருந்து பெற்ற பணம் எவ்வளவு? மூன்றரை ஆண்டு காலமாக பெற்ற நிதியினை வைத்து என்னென்ன நன்மைகளை உமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்து இருக்கிறீர் ? மூன்றரை ஆண்டு காலமாக தமிழ அரசின் உதவிகளும், திட்டங்களும் மக்களுக்கு சென்றடைந்து உள்ளதா?. மூன்றரை ஆண்டு காலமாக தொழில் வளம் பெற ஏதேனும் செய்தது உண்டா? மூன்றரை ஆண்டு காலமாக விவசாயம் செழிக்க ஏதேனும் செய்தது உண்டா? மூன்றரை ஆண்டு காலமாக மக்களிடம் குறைகளை கேட்க எத்தனை முறை மக்களை சந்தித்து இருக்கின்றீர்.? மூன்றரை ஆண்டு காலமாக எத்தனை குறைகளை நிறைவாக்கி இருக்கின்றீர்?. எத்தனை குறைகளை நிறைவேறக் காத்து இருக்கின்றன?. லஞ்சங்களை ஒழித்தது உண்டா ? தொகுதி வளர்ச்சி திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என்னென்ன என்பதை கூற முடியுமா? மூன்றரை ஆண்டு காலமாக தொகுதியின் வளர்ச்சிகாக எத்தனை போராட்டங்களை செய்து இருக்கின்றீர் ? மூன்றரை ஆண்டு காலமாக சட்டசபைக்கு ஒழுங்காக போனது உண்டா? கணக்கை கூற முடியுமா? மூன்றரை ஆண்டு காலமாக தொகுதிக்காக எதனை முறை சட்டமன்றக் கூட்டத் தொடரில், சட்டப்பேரவையில் பேசி இருக்கின்றீர் ?. சட்டசபையில் பேசியவற்றை கூற முடியுமா? பேசியதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நிராகரிக்கப்பட்ட விவரங்களைக் கூற முடியுமா? மூன்றரை ஆண்டு காலமாக தொகுதிக்காக தமிழக அரசிடம் எதையாவது போராடி பெற்று தந்து இருக்கின்றீரா? இதுவரை யாரும் விருத்தாச்சல தொகுதியில் யாரும் செய்யாத ஒன்றை செய்தது உண்டா?. சவால்களை எதிர் கொண்டு சாதித்து காட்டியது உண்டா?. இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். நீங்கள் உண்மையான, சுத்தமான அரசியல்வாதி என்றால், உண்மையில் நீங்கள் நன்மைகளை செய்து இருக்கின்றீர் - என்றால் தைரியமாக செய்த நன்மைகளை பட்டியலிடுங்கள். பார்க்கலாம்?. தைரியம் இருக்கின்றதா? செய்த நன்மைகள் பட்டியல் இருக்கின்றதா? செய்து கொண்டிருக்கும் நன்மைகள் பற்றிய பட்டியல் இருக்கின்றதா? செய்யப்போகும் நன்மைகளை பற்றிய பட்டியல் இருக்கின்றதா?. காத்திருக்கிறோம் உங்கள் பதிலுக்காக……..6 Aug 09 பட்டியலிடத் தயாரா ?
0 கருத்துக்கள்:
Post a Comment