விஜயகாந்தே, நீ என்ன செய்து கிழித்து விட்டாய் ???

07 Aug 09 விஜயகாந்தே, நீ என்ன செய்து கிழித்து விட்டாய் ???

உலகளவில், “தான் என்ற அகங்காரம்” கொண்ட அரசியல்வாதிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் கருணாநிதிக்கும் அதே நிலைதான் ஏற்படும். நேற்று முன்தினம் நான் கூறிய குற்ற்ற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாத கருணாநிதி, நேரடியாக பதிலளிக்காமல், “டிவியில் உளறுகிறார். எனக்கொரு சேனல் இருந்திருந்தால் அவரது உளறலுக்கு மறுநிமிடமே நானும் எனது பதிலை மக்களுக்கு தெரிவித்து இருப்பேன், ௫௨ ஆண்டு பொதுவாழ்க்கையிலும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதியால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைத்தது ?. ” - இவ்வாறு பிதற்றியுள்ளார் விஜயகாந்து.

நன்றி : தினமலர்.

இந்த அடுத்துவரை மதிக்கத் தெரியாதா ?

அதிலும் 85 வயது ஆகும் ஒரு மாநிலத்தின் முதல்வரை மதிக்கத் தெரியாதா ?

உனக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரியுமா?.

உன்னையெல்லாம் ஒரு ஆள் என்று மதித்து நேற்றைய தினம் தி.மு.க அரசில் செய்த சாதனைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டாரே,

தலைவர் முறையாக உன்னுடைய கேள்விகெல்லாம் பதில் கூறிவிட்டார் என்ற ஆதங்கமா?.

தலைவர் பேசியதையே நீ உளறல் என்று சொல்லும் நீ….என்றாவது ஒரு நாலாவது உலராமல் பேசி இருக்கிறாயா.

உனக்குத் தெரிந்த அரசியால் நாகரீகம் இதுதானா?

உன் வயது என்ன அவர் வயது என்ன?.

உனது வயது அவரது அனுபவ்ம்.

கையில் ஒரு மைக்கும், உனக்கு முன்னாள் ஒரு கூட்டமும் கூடினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா?

நீ முதலில் மற்றவருக்கு எடுத்துகாட்டாக இரு….. பின்னர் மற்றவரி கை நீட்டி பேசு.

மூன்றாம்தர பேச்சாளரை விட கேவலமாக பேசும் நீயெல்லாம் ஒரு கட்சியின் தலைவரா?.

மூன்றாந்தர பேச்சுக்களைப் பேசும் உனக்கு எதுக்கையா முதல்வர் பதவிக்கு ஆசை.

எப்படி பேசுவது என்று தெரியாத உனக்கு முதல்வர் ஆசையா?.

இந்த லட்சணத்தில் உனக்கெல்லாம் டிவி ஒரு கேடா?.

மதியில்லாத

மரியாதை இல்லாத,

நன்றியில்லாத,

ஆட்டுத்தோல் போர்த்திய நரியே

உனக்கு ஒருத்தன் வருவான்.

அவன் வைப்பான் உனக்கு ஆப்பு,

மூன்றரை ஆண்டு காலமாக நீயும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு எம்.எல்.ஏவாக இருக்கிறாய்.

நீ என்ன செய்து கிழித்து விட்டாய்…. உன் தொகுதிக்கு என்ன செய்தாய் என்று பட்டியல் இட முடியுமா?.

மண்ணாங்கட்டி விஜயகாந்தே…..உனக்கு தைரியம் இருந்தால் தொலைகாட்சி சேனலில் லைவ் சோவுக்கு வந்து நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

உன்னால் முடிந்தால் பின் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்.

திடீர் இட்லி,திடீர் சட்னி, திடீர் சாம்பார் மாதிரி திடீரென்று கட்சி ஆரம்பித்த காரணம் என்ன ?

எந்த ஒரு சுய சிந்தனையும், திராவிட சிந்தனையும், முற்போக்கான சிந்தனையும் இல்லாத நீங்கள் உங்களது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கட்சி என பெயர் வைக்க காரணம் என்ன ?

கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் தி.மு.கவைப் பார்த்து காப்பி அடித்து வைக்க காரணம் என்ன ?

கட்சியின் கொள்கைகள் என்ன?.

கட்சியின் திட்டங்கள் என்ன ?.

கட்சியின் முற்போக்கு சிந்தனைகள் யாவை ?

ஜாதி பாகுபாடின்றி அனைவருக்கும் சம அந்தஸ்து உமது கட்சியில் உண்டா?

2006 முதல் விருத்தாச்சல சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் நீங்கள் உங்கள் தொகுதிக்கு செய்த காரியங்கள் யாவை?. பட்டியலிட முடியுமா ?

கடந்த மூன்றையாண்டு காலமாக எம்.எல்.ஏவாக இருக்கும் உங்கள் தொகுதிக்கு செய்த நன்மைகள் என்னென்ன ? பட்டியலிட முடியுமா ?

சட்ட மன்ற தேர்தலின் போது விருத்தாச்சல தொகுதி மக்களுக்கு, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியில் கொஞ்சமாவது நிறைவேற்றுநீரா ? பட்டியலிட முடியுமா ?

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் உங்களுக்கு நினைவு இருக்கிறதா ?.பட்டியலிட முடியுமா ?

விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை நகராட்சிகள் உள்ளன என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை கிராமங்கள் உள்ளன என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியின் மக்கள்தொகை எவ்வளவு என்று தெரியுமா?

விருத்தாச்சலத் தொகுதியில் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியின் மொத்த பரப்பளவு எவ்வளவு என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியில் உள்ள கிராமங்களில் எத்தனை கிராமங்கள் முழுமையாக சாலை வசதிகள் உள்ளன என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியில் எவ்வளவு விவசாய நிலங்கள் உள்ளன என்று தெரியுமா?.

விருத்தாச்சலத் தொகுதியில் எவ்வளவு தரிசு நிலங்கள் உள்ளன என்று தெரியுமா?.

மூன்றரை ஆண்டு காலமாக எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீட்டில் நீங்கள் தமிழக அரசிடமிருந்து பெற்ற பணம் எவ்வளவு?

மூன்றரை ஆண்டு காலமாக பெற்ற நிதியினை வைத்து என்னென்ன நன்மைகளை உமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்து இருக்கிறீர் ?

மூன்றரை ஆண்டு காலமாக தமிழ அரசின் உதவிகளும், திட்டங்களும் மக்களுக்கு சென்றடைந்து உள்ளதா?.

மூன்றரை ஆண்டு காலமாக தொழில் வளம் பெற ஏதேனும் செய்தது உண்டா?

மூன்றரை ஆண்டு காலமாக விவசாயம் செழிக்க ஏதேனும் செய்தது உண்டா?

மூன்றரை ஆண்டு காலமாக மக்களிடம் குறைகளை கேட்க எத்தனை முறை மக்களை சந்தித்து இருக்கின்றீர்.?

மூன்றரை ஆண்டு காலமாக எத்தனை குறைகளை நிறைவாக்கி இருக்கின்றீர்?.

எத்தனை குறைகளை நிறைவேறக் காத்து இருக்கின்றன?.

லஞ்சங்களை ஒழித்தது உண்டா ?

தொகுதி வளர்ச்சி திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என்னென்ன என்பதை கூற முடியுமா?

மூன்றரை ஆண்டு காலமாக தொகுதியின் வளர்ச்சிகாக எத்தனை போராட்டங்களை செய்து இருக்கின்றீர் ?

மூன்றரை ஆண்டு காலமாக சட்டசபைக்கு ஒழுங்காக போனது உண்டா? கணக்கை கூற முடியுமா?

மூன்றரை ஆண்டு காலமாக தொகுதிக்காக எதனை முறை சட்டமன்றக் கூட்டத் தொடரில், சட்டப்பேரவையில் பேசி இருக்கின்றீர் ?.

சட்டசபையில் பேசியவற்றை கூற முடியுமா?

பேசியதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நிராகரிக்கப்பட்ட விவரங்களைக் கூற முடியுமா?

மூன்றரை ஆண்டு காலமாக தொகுதிக்காக தமிழக அரசிடம் எதையாவது போராடி பெற்று தந்து இருக்கின்றீரா?

இதுவரை யாரும் விருத்தாச்சல தொகுதியில் யாரும் செய்யாத ஒன்றை செய்தது உண்டா?.

சவால்களை எதிர் கொண்டு சாதித்து காட்டியது உண்டா?.

நீ உண்மையான, சுத்தமான அரசியல்வாதி என்றால்,

உண்மையில் நீ நன்மைகளை செய்து இருக்கின்றீர்

- என்றால்

தைரியமாக செய்த நன்மைகளை பட்டியலிடுங்கள்.

பார்க்கலாம்?.

தைரியம் இருக்கின்றதா?

செய்த நன்மைகள் பட்டியல் இருக்கின்றதா?

செய்து கொண்டிருக்கும் நன்மைகள் பற்றிய பட்டியல் இருக்கின்றதா?

செய்யப்போகும் நன்மைகளை பற்றிய பட்டியல் இருக்கின்றதா?.


விஜயகாந்தே காத்திருக்கிறோம் உங்கள் பதிலுக்காக

Posted by போவாஸ் | at 12:33 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails