எங்கப்பா இந்த அ.தி.மு.க, பா.ம.க காரங்களக் காணோம்.?.

09 Aug 09 எங்கப்பா இந்த அ.தி.மு.க, பா.ம.க காரங்களக் காணோம்.?.

எங்கப்பா இந்த அ.தி.மு.க, பா.ம.க காரங்களக் காணோம்.?.

வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறிய எந்த அரசியல் கட்சியும் அதை நிரூபிக்க முன்வரவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தோற்ற அதிமுக, பாமக, பாஜக ஆகியவை வாககுப் பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாகவும் அதில் முறைகேடு செய்யப்படுவதாகவும் புகார் கூறின.

மேலும் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் வாக்குப் பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து வழக்குகளும் தொடர்ந்தன.

இதையடுத்து வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வருமாறு இந்தக் கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடிதங்கள் அனுப்பியது.

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை புகார் செய்த கட்சிகள் டெமோ செய்து நிரூபித்துக் காட்ட தில்லி வருமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களோ அதன் பிரதிநிதிகளோ டெல்லிக்குச் செல்லவில்லை. நிரூபிக்க்கவுமில்லை.

இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் அளித்த அறிக்கையில் :

மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்று கூறிய கட்சிகள், வழக்குப் போட்ட கட்சிகளிடம், புகார் கூறிய கட்சிகளிடம் அதை நேரில் வந்து நிரூபிக்குமாறு கூறியிருந்தோம்.

இதற்காக ஆகஸ்ட் 3முதல் 8ம் தேதி வரை நேரமும் ஒதுக்கியிருந்தோம்.

இவர்களது புகார்களையடுத்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து 100 மின்னணு எந்திரங்களை டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.

இதற்காக , இந்த மின்னணு எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களான BEL - ECIL நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களும், பொறியாளர்களும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

புகார், வழக்கு தொடர்ந்த கட்சிகள், இருக்கின்ற 100 வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்து நிரூபிக்கலாம் என்று கூறியது.

ஆனால், எந்தக் கட்சியும் முறைகேட்டை நிரூபிக்க முன்வரவில்லை.

நிபுணர்களைக் கொண்டு சோதனையும் நடத்தினோம்.

அதிலும் முறைகேடு செய்ய முடியாது என்பது நிரூபணமானது.

அதில் எந்தக் கோளாறும் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இதனால் இந்தக் குற்றச்சாட்டே அர்த்தமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2004 முதல் 2009 வரை நாட்டில் நடைபெற்ற கிட்டத்தட்ட 30 மாநில மற்றும் நாடு தழுவிய தேர்தல்களில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை பயன்படுத்த பட்டுள்ளதாகவும்,

இதுவரை மின்னணு எந்திரங்களை பற்றிய குறைகளையும், புகார்களையும், வழக்கு தொடர்ந்த எவரும் நிரூபிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

Posted by போவாஸ் | at 12:42 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails