பிரிட்டனிலிருந்து 10 லட்சம் பணியாளர்கள் வெளியேறுவர்

06 Aug 09 பிரிட்டனிலிருந்து 10 லட்சம் பணியாளர்கள் வெளியேறுவர்

பிரிட்டனிலிருந்து 10 லட்சம் பணியாளர்கள் வெளியேறுவர் :

உலகாளவிய பொருளாதார சரிவின் தாக்கம் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில், பிரிட்டனிலிருந்து சுமார் 10 லட்சம் திறமை வாய்ந்த அன்னிய நாட்டு பணியாளர்கள் வெளியேறுவார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சரிவின் தாக்கம் காரணமாக பிரிட்டனில் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வருவதால், ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் அன்னிய நாட்டவர்கள் வெளியேறலாம் என லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டன் திறன் வாய்ந்த பணியாளர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வெளியேறும் அன்னிய நாட்டு பணியாளர்களை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவும், சீனாவும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக உருவெடுத்து வருவதால்,இந்த இரு நாடுகளிலும் இப்பணியாளர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: tamil.webdunia.com

Posted by போவாஸ் | at 12:30 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails