டுபாக்கூர் விஜயகாந்த்

03 Aug 09 டுபாக்கூர் விஜயகாந்த்

விஜயகாந்த் அவர்களின் இன்றைய அறிக்கை : -

திமுக வெட்டும் குழியில் திமுகவினரே விழும் நிலை:

விஜயகாந்த் கடும் தாக்கு தேமுதிக வேட்பாளர்கள் அருண்குமார் (கம்பம்), சவுந்திரபாண்டியன் (ஸ்ரீவைகுண்டம்), அழகு பாலகிருஷ்ணன் (இளையான்குடி) அறிமுக கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் விஜயகாந்த், ’’நான் சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அதனால்தான் எம்.ஜி.ஆர். மீது இன்றும் பற்று வைத்துள்ளேன். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க. வெற்றி பெற்றதும் இல்லை. ஆட்சிக்கு வந்ததும் இல்லை.

தற்போது வெற்றி பெற்றும்கூட தி.மு.க. அரசு மைனாரிட்டியாக உள்ளது. இதனால்தான் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களை மிரட்டி தங்கள் பக்கம் தி.மு.க. இழுக்கின்றது. இதனை பார்க்கும்போது தாங்கள் வெட்டும் குழியில் அவர்களே விழும் நிலை உள்ளது.

அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பது அவர்களது இஷ்டம். அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த இடைத்தேர்தலில் உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகள் தே.மு.தி.க.வுக்கு வாக்களிப்பார்கள்.

நல்லக்கட்சிக்கு, உண்மையான கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள். கடந்த 2 1/2 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி ஆண்ட போதும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. நல்லது செய்தோம் என்று சொல்கிறவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை ஏன் வாரி இறைக்க வேண்டும்.

வாக்காளர்கள் தற்போது தே.மு.தி.க.வுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தே.மு.தி.க.வுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற பயத்தில் தி.மு.க. வினர் முரசு சின்னம் வரைவதை தடுக்கின்றனர். வரைந்த சின்னத்தை அழிக்கின்றனர்.

தி.முக. ஆட்சியில் அடிதடி, அராஜகம், அக்கிரமம், விலைவாசி உயர்வுதான் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க பொதுத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள்.

வருகிற பொதுத்தேர்தலில் தே.முதி.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மின்னணு எந்திரத்தில் வாக்காளர்கள் பட்டனை அழுத்தும்போது “பீப்” என சத்தம்தான் வருகிறது. வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என தெரிய வேண்டும். இதுகுறித்து நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்’’என்று தெரிவித்தார்.

நன்றி : நக்கீரன் இணைய தளம்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்று எப்பொழுதும் பீற்றிக்கொள்ளும் விஜயகாந்தே எதற்காக, எந்த காரணத்திற்காக எமது தலைவர் கலைஞர் கருணாநிதி கையினால் தாலி கயிறினை வாங்கி உங்கள் அருமை மனைவிக்கு கட்டினீர்.

உத்தமரான உங்களுக்கு அன்றைக்கு எங்கள் கலைஞர் பற்றி தெரிய வில்லையா.?

என்னமோ வானத்தில் இருந்து குதித்த கடவுள் மாதிரி பேசிக்கொண்டே போகிறீர்.

மக்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீரோ ?.

நீங்கள் பேசிய பேச்சுக்கு ஒரு நாள் கண்டிப்பாக ஒரு பெலனை அனுபவிக்க வேண்டிய காலம் வரும்.

அப்பொழுது நீங்கள் உணர்வீர்கள். ஆனால் காலம் கடந்த உணர்வாக இருக்கும்.

எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு தி.மு.க ஒரு மைனாரிட்டியாக உள்ளது என்று கூறிக் கொண்டு இருக்கிறீர்.

கடந்த சட்ட சபை தேர்தலில் வெற்றி நிலவரம்.

Party wise results

Party Seats Contested Seats Won

Dravida Munnetra Kazhagam 132 96

Desiya Murpokku Dravida Kazhagam 232 1

96 இடங்களை கை பற்றிய கட்சி மைனாரிடி கட்சி என்றால் ஒரே ஒரு இடத்தை மட்ட்டும் கை பற்றின உங்களது கட்சி ஒரு கட்சியே இல்லை என்று எடுத்து கொள்ளலாமா. ?

தி.மு.க வினர் அமைதியாக இருப்பதால் உங்கள் இஷ்டத்துக்கு வரம்பு மீறி பேசிக்கொண்டு செல்வது அழகல்ல.

ஒரு நாள் இந்த பேச்சுக்கள் எல்லாம் உங்களை நோக்கி வரும் காலம் வரும். இன்று நீங்கள் தலைவரை தரக்குறைவாக பேசுவது போல் நாளை உங்களை தரக்குறைவாக பேசுவதற்கு ஒரு ஆள் வரக்கூடிய காலம் வரும்.

ஊரெல்லாம் கணினி மையம் திறந்த உங்களுக்கு உங்கள் மகனை ஒழுங்காக படிக்க வைக்க தெரியவில்லை. உங்களுக்கு உண்மைலேயே படிப்பும் மீதும் மாணவ கண்மணிகள் மீதும் அக்கறை இருந்தால் அது முதலில் உங்கள் வீட்டில் இருந்தல்லவா வந்திருக்க வேண்டும்.

நீங்கள் கணினி மையம் திறந்ததே ஒரு பரபரப்புக்கும் பெருமைக்கும் புகழுக்கும் ஒட்டு வாங்குவதற்கு தானே தவிர, உண்மையான அக்கரையில் இல்லை.

உத்தமன், நல்லவன் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இது நாள் வரை உங்கள் வாழ்க்கையில் சிறு தவறு கூட செய்தது இல்லை என்று வீதியில் நின்று கூறத்தயாரா?.

உங்களது சொத்து பட்டியலை வெளியிடத் தயாரா ?

அல்லது நீங்கள் இது நாள் வரை செய்த தவறுகளை அறிக்கையிட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்கத் தயாரா?

கடந்த சட்டசபை தேர்தலில் விருத்தாசல தொகுதியில் நின்று வெற்றி பெற்று நீங்களும் ஆகிவிட்டீர்கள். அதனால் என்ன பிரயோஜனம்?.

ஒரு முறையாவது சட்டசபை கூட்டத்தொடரில் நாள் தவறாமல் சென்றது உண்டா ?. ஏதாவது பேசியது உண்டா?.

சட்டசபை கூட்டத்திற்கே ஒழுங்காக செல்ல முடியாத நீங்கள் எதற்காக பரபரப்பு அறிக்கை விட்டு கொண்டு இந்த இடைத்தேர்தலில் நிற்கின்றீர்கள்?. கேவலமாக இல்லை?.

” பள்ளிக்கே செல்லாமால் இருக்கும் ஒருவன், எனக்கு பாஸ் மார்க் போடுங்கள், அதிலும் 100 சதவீதம் மார்க் போடுங்கள் ” என்று சொல்வதை போல் இருக்கிறது உங்கள் பேச்சும், அறிக்கையும், உங்கள் செயல் பாடும்.

Posted by போவாஸ் | at 12:09 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails