விஜயகாந்தின் ” டப்பா படங்கள் ”
08 Aug 09 விஜயகாந்தின் ” டப்பா படங்கள் ”
இலவசத் திட்டங்களால் ருபாய்.75,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது - என்று இளையான்குடி தொகுதியில் விஜயகாந்து குறிப்பிட்டுருக்கிறார் ?.
——————————————–
விஜயகாந்து அரசியலில் ஒரு அரைவேக்காடு ! அவரால் மட்டும் இப்படிப்பட்ட ‘அறிய கண்டுபிடிப்புகளை’ வெளியிட முடியும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ்
ஏழைப் பெண்களின்
திருமணத்திற்காக
20,000 ருபாய்
உதவியாகத்தான்
வழங்கப்படுகிறது.
வட்டிக்கு கடனாக அல்ல !
5 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.கவுக்குப் பிரச்சாரம் செய்யும்போது
“திருமணத்திற்காக இலவசமாக 20,000 ரூபாய் ஏன் கொடுக்க வேண்டும் ?.
அதை உடனே நிறத்த வேண்டும்” என்று சொல்லத் தயாரா விஜயகாந்து ?
* ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் - நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுவும் இலவசம்தான்.
5 தொகுதிப் பிரசாரத்தின் போது “ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் - நிதி உதவி அவ்ழங்குவது ‘வேஸ்ட்’ - உடனே அதை நிறுத்த வேண்டும் - என்று கூறத் தைரியம் உண்டா விஜயகாந்துக்கு !
* 50 வயது கடந்த பின்னரும் திருமணமாகாமல், வறுமையில் வாடும் ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது !
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் ஏன் தர வேண்டும், - ‘வேஸ்ட்’ என்று சொல்வாரா விஜயகாந்து ?
* முதியோர் - ஆதரவற்ற விதவைகளுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
* கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகையாக மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
* 6 லட்சத்து 79 ஆயிரத்து 653 அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பளுக்கு 306 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 549 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
* இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்படுகின்றன.
* 220 கோடி ரூபாய் செலவில் 11 லட்சம்க் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
* 6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன.
* 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 - வேலையற்ற இளைஞர்களுக்கு 156 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. * மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ் வழங்கப்படுகிறது.
* 71 லட்சம் குழந்தைகளுக்கு - மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் ௩ முறை முட்டைகள் வழங்கப்படுகின்றன. முட்டை சாப்பிடாத 90 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை சத்துணவுடன் வாழைப்பழம் வழங்கப்படுகிறது.
இப்படி -
திருமணமாகாத ஏழைப் பெண்கள், ஏழை கர்ப்பிணிப் பெண்கள்,, 50௦ வயது கடந்தும் திருமணமாகாமல் வாடும் பெண்கள், முதியோர், ஆதரவற்ற விதவைகள் - ஊனமுற்றோர் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் - மாணவ மாணவியருக்கான இலவ்ச பஸ் பாஸ் - இலவ்ச வீட்டு மனை பட்டா - எரிவாயு இணைப்புடன் இலவ்ச எரிவாயு அடுப்புகள் - சத்துணவுடன் முட்டைகள் - வாழைப்பழம் ஆகியவற்றை இடைத் தேர்தல் நடைபெறும்
5 தொகுதி வாக்காளர்களிடம்
பட்டியலிட்டு
எல்லாமே
வேஸ்ட்
என்று பிரச்சாரம் செய்ய
விஜயகாந்துக்கு
தெம்புண்டா?
திரானியுண்டா?
இலவசத் திட்டங்களால் 75 ஆயிரம் கோடி கடன் என்று வக்கனை பேசுகிற நடிகர்
” திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் கேளிக்கை வரியில்லை என்று ஏன் சொல்ல வேண்டும் ? இந்தத் திட்டத்தால் அரசுக்கு சுமார் 50 கோடி ( இழப்பு ) கடன் ஏற்படுகிறதே - என்று கேட்கத் தயாரா ?.
அட; அதுகூட வேண்டாம் - ” நான் நடித்த டப்பாப் படங்களான ‘மரியாதை’ , ;எங்கள் ஆசானு’க்கு கேளிக்கை வரியை ரத்துச் செய்ய வேண்டாம், நான் கேளிக்கை வரி கட்டத் தயார்’” என்றாவது விஜயகாந்து அறிவிக்கத் தயாரா ? .
நன்றி : முரசொலி நாளிதழ்
0 கருத்துக்கள்:
Post a Comment