ஆங்கிலம், தங்கிலீஷ், தமிழ்..

நாளுக்கு நாள் நம் வாழ்க்கை முறையிலும், பழக்க வழக்கங்கக்ளிலும், பேச்சு வழக்கங்களிலும் பல மாற்றங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது, பேச்சு வழக்கில் ஆங்கிலம் மிக எளிதாக நமது தமிழ் மொழியில் நுழைந்து, இன்று கிட்டத்தட்ட பல ஆங்கில வார்த்தைகளை நம் தமி அகாராதியில் இடம் பெரும் அளவுக்கு இருக்கின்றது. முதலில் ஆங்கில வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக இருந்தது. பின்னர் ஆங்கில வார்த்தைகள் தமிழுடன் கலந்து தங்லிஷ் ஆனது. இப்போ ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் என்று சொல்லும் அளவுக்கு மாறிப் போயிருக்கிறது. நம்மோடு மிக அதிகமாகவே ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. நமக்கும் பிடித்து இருக்கின்றது. நாம் அன்றாடம் பேசும், கேட்கும் சில தமிழ் (ஆங்கில) வார்த்தைகள்.

sir, வணக்கம்.

TIme என்னாச்சு ?.

அந்த bus கோயம்பேடு bus stand போகுமா ?.

அக்கா, busTicket இல்லையாம், அதான் Trainbook பண்ணியிருக்காங்களாம்.

மதியம் என்ன lunch ?

Bike எல்லாம் இங்க park பண்ணக்கூடாது.

ஏம்பா, mount road வரை auto வருமா ?.

அம்மா, இந்த saree நல்லா இருக்குல.

ஏங்க, Cutting, shavingக்கு எவ்வளவுங்க ?.

இந்த areasupermarket இருக்கா?

இன்னைக்கு என்ன dress போடுறது?.

புது watchஆ நல்லா இருக்கே ?.

JJ நகர் bus stop வந்தா சொல்லுங்க.

Officeக்கு ஏன் late ?

Morningல இருந்து phone பண்றேன், எடுக்க மாட்டேங்குறானே ?

உங்க வீட்டுல sun tv, விஜய் tv, ராஜ் tv, ஜெயா tv, சுட்டி tv தெரியுமா?

உங்க pant size என்ன ?

evening cinema போகலாமா?

Light , fan எல்லாம் off பண்ணுங்கப்பா, current waste ஆகுதுல.

Room keyய பாத்தீங்களா?

Daily காலைல நான் walking போவேன்.

Sir, sunday hindu paper இருக்கா?

அக்கா, விஜய் tvல 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'ன்னு ஒரு program வருதே, எப்படி இருக்கு?

10 இட்லி, 2 chicken leg piece parcel கட்டுப்பா.

சாத்துக்குடி juice இருக்கா?

கத்தரிக்கா kilO எவ்வளவு ?

தெரியாம கொட்டிட்டேன் sorry sir.

உங்களுக்கு, sugar, bp normalaதான் இருக்கு.

மொத்தமா வாங்குன எவ்ளோ discount கொடுப்பீங்க ?

Coffee, tea எல்லாம் சீக்கிரம் stop பண்ணனும்

ரொம்ப tiredஆ இருக்கீங்க போல..

இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

ஆனா பாருங்க இந்த வார்த்தைகளை எல்லாம் நம்மளால use பண்ணாம பேச முடியாதுன்கறதுதான் உண்மை....

இதை படிச்சவுங்க யாரும் கோச்சுக்க கூடாது...

சும்மா time passக்கு தெரியாத்தனமா எழுதிட்டேன்....very sorry.

Posted by போவாஸ் | at 4:02 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails