தொடரும் கள்ளக் காதல் கொலைகள்

12 Aug 09 தொடரும் கள்ளக் காதல் கொலைகள்



தொடரும் கள்ளக் காதல் கொலைகள் :

சமீப காலங்களாக கள்ளக் காதல் கொலைகள் அதிகரிக்கத்துக் கொண்டிருப்பது மிக வேதனைக்கு உரிய விஷயமாகும்.

சிறந்த பண்பாடும், கலாச்சாரமும், வாழ்க்கை நெறிமுறைகளும் கொண்ட நம் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் கள்ளக் காதலும், அதையொட்டிய கொலைகளும், கொள்ளைகளும் நடப்பது வேதனைக்கு உரிய விஷயமாகும்.

இன்று நக்கீரன் இணையதளத்தில் வந்த ஒரு செய்தி :

தாய்க்கு செய்த துரோகம்:தந்தையை வெட்டிக்கொன்ற மகன் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர்களுக்கு முருகன் (31), மகாதேவி (25) என்ற பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் கேசவனுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (31) என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கோவிந்தம்மாளுக்கு குழந்தைகள் உள்ளன. இந்த விபரம் கேசவனின் மனைவி விஜயலட்சுமிக்கு தெரிய வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

அப்போது விஜயலெட்சுமி தனது கணவர் கேசவனை மண்வெட்டியால் வெட்டி உள்ளார். இந்த வழக்கில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தால் கேசவன் தனது கள்ளக்காதலி கோவிந்தம்மாளை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கினார்.

இது கேசவனின் மகன் முருகனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தாயை சிறைக்கு அனுப்பிவிட்டு, கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்துவதா? உடனே சொத்தை எங்களது பெயருக்கு எழுதி வையுங்கள்” என்று முருகன் தந்தையிடம் தகராறு செய்தார்.

ஆனால் கேசவன் சொத்தை எழுதி கொடுக்க மறுத்துவிட்டார். நேற்று கேசவனும், கள்ளக்காதலி கோவிந்தம்மாளும் ஒரே அறையில் படுத்து உல்லாசம் அனுபவித்தனர். தாய்க்கு துரோகம் செய்ததை அறிந்த முருகன் அரிவாளுடன் அங்கு சென்று கேசவனை சரமாரி அரிவாளால் வெட்டினார்.

அதை தடுத்த கள்ளக்காதலி கோவிந்தம்மாளையும் வெட்டினார். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.பி.அஸ்ரா கார்க் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய முருகனை, வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் தனிப்படை போலீசார். தீவிரமாக தேடிவருகிறார்கள்.

எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது நமது தமிழ் சமூகம்.?

Posted by போவாஸ் | at 1:04 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails