அரைவேக்காடு விஜயகாந்த்

06 Aug 09 அரைவேக்காடு விஜயகாந்த்

வர வர இந்த விஜயகாந்துக்கு என்ன பேசுறோன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது.

இந்த அரைவேக்காடு விஜயகாந்த்… என்னமோ இவருதான் கடவுளின் மறு பிறப்பும் மாதிரியும், தப்பே செய்யாத மனுஷன் மாதிரியும், ஒழுக்கத்தில் பெரும் பட்டங்களும் பெருமையும் வாங்கின மாதிரியும் பிதற்றிக்கொண்டு மற்றவர்களை ஏசிக்கொண்டும் இருக்கிறார்.

இந்த அரைவேக்காடு விஜயகாந்துக்கு அரசியலும் தெரியவில்லை, அரசியல் கட்சி தலைவர்களைப் பற்றியும் தெரியவில்லை, அரசியல் வரலாறும் தெரியவில்லை.

தான் பேசுவதுதான் உண்மை போலவும், தனக்குத்தான் எல்லாம் தெரிந்து இருக்கிறது போலவும் தாமே கடவுளின் மறு பிறப்பு எடுத்த உத்தம மனிதர் என்று நினைத்துக் கொண்டு தன இஷ்டத்திற்கு, செல்லும் இடமெல்லாம் சகட்டு மேனிக்கு பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில், இந்த அரைவேக்காடு விஜயகாந்த் பிதற்றியது - “ எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தி,மு.க. தலை தூக்கவேயில்லை ” என்ற புது புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்.

அரசியல் வரலாறு தெரியாத இந்த அரைவேக்காடு விஜயகாந்த், கடந்த கால அரசியல் வரலாறினை இந்த கட்டுரையை படித்த பின்பாவது தெரிந்து கொள்ளட்டும்.

முரசொலி” பத்திரிகை இணையதளத்தில் வெளிவந்த கட்டுரையை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

கட்டுரைக்கு நன்றி :- முரசொலி இணையதளம். www.murasoli.in

“எம்.ஜி.ஆர். 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தபோது தி.மு.க.வால் தலை தூக்க முடியவில்லை. ஆகையால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், விசுவாசிகள் தி.மு.கவுக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள், தே.மு.தி.க.விற்கே வாக்களிப்பார்கள் ” - என்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் (பிதற்றியிருக்கிறார்) விஜயகாந்த்.

_____________________________

விஜயகாந்த் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் - குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வெளியே ஓய்வு எடுக்காதபோது - அரசியல் பேச வருவார். அவருக்கு அவரது சினிமா மார்க்கெட் சரிந்து போன நேரத்தில் அரசியல் கட்சி தொடங்கும் ஆசை ஏற்ப்பட்டது.

அவர் கட்சி தொடங்கிய பின்னரும் அவர் நடித்து வெளிவந்த

தர்மபுரி

சபரி

அரசாங்கம்

மரியாதை

எங்கள் ஆசான்

போன்ற படங்கள் அனைத்தும் ஓடவில்லை. டப்பாவுக்குள் பொய் சுருண்டு கொண்டன ! எங்கள் ஆசானை வெளியிட விநியோகஸ்தர்கள் கூட கிடைக்கவில்லை!

சினிமாவில், அவரது தொடர் தோல்வி - அவருக்குப் புதியதோர் ஞானோ தாயத்தை தந்திருக்கிறது. அவர் டைரக்டர் ஆகப் போகிறாராம். அது எப்படியோ தொலையட்டும் !

அரசியலுக்கு வந்து குப்பை கொட்டி 4 ஆண்டுகள் ஆகி விட்டனவே - கட்சி தொடங்குவதற்கு - தமிழக அரசியலில், இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் அர்வமாவது அவரிடம் இருக்கிறதா, அட, படித்து தெரிந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் பக்கத்தில் இருக்கிற பண்ருட்டி போன்றவர்களிடமாவது - கடந்த கால அரசியல் பற்றிக் கலந்து பேசி - விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியாவது அவருக்கு உண்டா ?

இல்லை என்பதால்தான் -

திருப்பரங்குன்றத்தில் - தனது ரசிகப் பெருமக்களுக்கும் தன்னைப் போலவே அரசியல் தெரியாது, அவர்களும் தன்னைப் போலவே அரைவேக்காடுகளாகத் தான் இருப்பார்கள் என்ற அசட்டுத்தனமான தைரியம் - நம்பிக்கையுடன்


” எம்.ஜி.ஆர். ஆட்சியில்

தி.மு.க தலை தூக்கவே

முடியவில்லை ”

- என்று உளறிக் கொட்டிக் கிளறி மூடியிருக்கிறார்.


எம்.ஜி.ஆர். காலத்தில் தி.மு.க. தலை தூக்கவே முடியவில்லையா ?

1980ம வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த பொது - எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம்தான்.

1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதன் முதலாக முதலமைச்சர் ஆனார்.

அவர் முதல்வரான பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் 1980 நாடாளுமன்றத் தேர்தல்தான்.


அந்தத் தேர்தலில் -

தி.மு.கழகமும் இந்திரா காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.

அந்த தேர்தலில் -

தமிழகம் புதுவை உள்ளிட்ட 40௦ நாடாளுமன்றத் தொகுதிகளில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி -

இரண்டே

இரண்டு

இடங்களில்

மட்டுமே வெற்றி பெற முடிந்தது!.


தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியிடம் அவரது கூட்டணி 38 தொகுதிகளில் தோல்வி அடைந்தது !


1. அந்தத் தேர்தலில்

தி.மு.கழகம்

போட்டியிட்ட

16 இடங்களிலும்

வெற்றிவாகை சூடியது.


2. 24 இடங்களில்

போட்டியிட்ட

காங்கிரஸ்

22 தொகுதிகளில்

வெற்றிமுரசு கொட்டியது!


அந்த 1980௦ல் இந்த விஜயகாந்த் எந்தப் படத்தில் எந்த நடிகையோடு - மரத்தைச் சுற்றி வந்து டூயட் பாடிக்கொண்டிருந்தாரோ ?.

அதனால்தான், அவருக்கு

எம்.ஜி.ஆர். ஆட்சியில்

தி.மு.க. போட்டியிட்ட

16 தொகுதிகளிலும்

நூற்றுக்கு நூறு

என்ற அளவில்

வெற்றி பெற்ற வரலாறு தெரியவில்லை!

அது மட்டுமா ?

1980௦ம் வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அதே சமயம் - புதுவை மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெற்றது.

அந்த தேர்தலில், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை!

எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி 25 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

தி.மு.க. 14 இடங்களிலும் ,

இந்திரா காங்கிரஸ் 10 இடங்களிலும்,

முஸ்லிம் லீக் 1 இடத்திலுமாக

மொத்தம் 25 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

அ.தி.மு.க கூட்டணியில் - ஜனதா கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும், சுயேட்ச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

ஆனால்n,

கூட்டணிக்குத் தலைமை வகித்த

எம்.ஜி.ஆர். கட்சி

ஒரு இடத்தில் கூட

ஜெயிக்கவில்லை.


இந்த வரலாறுகள் பற்றி மாஜி நடிகருக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால்தான் -

” எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்

தி.மு.க. தலை தூக்கியதேயில்லை ”

- என்று அரசியல் அரைவேக்காட்டுத்தனமாக - திருப்பரங்குன்றத்தில் பிதற்றியிருக்கிறார்.


அந்த 1980௦ புதுவை சட்டமன்றத் தேர்தலின் விளைவாக - புதுவை மாநிலத்தில் டி.ராமச்சந்திரன் தலைமையிலான தி.மு.க கூட்டணி அரசுதான் பதவியேற்றது என்பதும் அந்த சட்ட மன்றத்திலே - எம்.ஜி.ஆருக்கு

ஒரு இடம் கூட

இல்லை

என்பதும் விஜயகாந்திற்கு தெரிந்திருக்க எந்தவித நியாயமுமில்லையே!

அப்போது அவருக்கும் அரசியலுக்கும் ‘ஸ்நான ப்ராப்தி’ கூட கிடையாது.

____________________________________


அதன்பிறகு -

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு -

1986ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலம்தான்.

அந்தத் தேர்தலின் பொது - இந்திரா காங்கிரசும் - அ.தி.மு.கவும் சேர்ந்து போட்டியிட்டன.

மொத்தம் இருந்த

97 நகர்மன்றத்

தலைவர் பதவிகளுக்கு

நடந்த தேர்தலில்

72 இடங்களில்

தி.மு.கழகக் கூட்டணி

வெற்றி பெற்றது.


அதிலே தி.மு.கழகம் மட்டும் தனித்து 64 நகர்மன்றங்களில் வெற்றி பெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சி 4 இடத்திலும்,

முஸ்லிம் லீக் கட்சி 1 இடத்திலும்,

ஜனதா கட்சி 2 இடத்திலும் ,

தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்றன.!


எம்.ஜி.ஆரின் கூட்டணியில்

அ.தி.மு.க 11 இடங்களிலும்

காங்கிரஸ் 11 இடங்களிலும்

மட்டுமே வெற்றி பெற்றன. 3 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றார்கள்.


அது போலவே, அந்தத் தேர்தலில் ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி மன்றங்கள் ஆகியவாற்ற்ர்துக்கான தேர்தல்களிலும் தி.மு.கழகக் கூட்டணியே பெரும் வெற்றியை பெற்றது!


ஆனால் -

திடீர் இட்லி

திடீர் சாம்பார்

திடீர் ரசம்

போல

திடீர் அரசியல்வாதியான விஜயகாந்த், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தி,மு.க. தலை தூக்கவேயில்லை என்கிறார்!


இதனை அறியாமை என்பதா ? அரசியல் அரைவேக்காடு என்பதா ?

கட்டுரைக்கு நன்றி :- முரசொலி இணையதளம். www.murasoli.in

Posted by போவாஸ் | at 12:15 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails