பா.ம.க ராமதாசுக்கு அவரே வச்சுகிட்ட ஆப்பு…..

10 Aug 09 பா.ம.க ராமதாசுக்கு அவரே வச்சுகிட்ட ஆப்பு…..

பா.ம.க ராமதாசுக்கு அவரே வச்சுகிட்ட ஆப்பு…..

இன்று சென்னையில் பா.ம.க. சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது குறித்து செயல்முறைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆந்திரத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு மாதிரி மின்னணு இயந்திரத்தில் வெளிநாட்டு மைக்ரோசிப்புகள் பயன்படுத்துகிறார்கள்.

இதற்கான ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொண்டு இங்குள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபட முடியும். என்றனர்.

இதை கேட்டுக்கொண்டிருந்த முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஸ்ணமூர்த்தி எழுந்து இதற்கு விளக்கம் அளித்தார்.

பாதுகாப்பு காரணங்களினாலேயே இந்த மைக்ரோ சிப்புகள் வெளிநாடுகளான அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் வாங்கப்படுகிறது.

இதில் மேலும் 6 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

எனவே தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவது போல இதில் முழுமையாக முறைகேடு செய் முடியாது.

சில சந்தேகங்கள் எழுந்தால் தேர்தல் ஆணைத்திடம் விளக்கம் பெறமுடியும் என்றார்.

முறைகேட்டை நிரூபிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் முன்னாள் தேர்தல் ஆணையர் இவ்வாறு கூறியதை சற்றும் எதிர்பாராத பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணையத்திற்கே சவால் விடும் அளவுக்கு பேசிக்கொண்டு இருந்த ராமதாஸ் இப்படி ஒரு கருத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவார் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

பின்னர் ஒருவாரு சமாளித்துக் கொண்டு, அந்தர் பல்டி அடித்து இதற்கு விளக்கம் அளித்த ராமதாஸ் , இந்த கூட்டத்தின் நோக்கம் தேர்தல் ஆணையம் இந்த முறைகேடு விசயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை உணர்த்துவதுதான் என்றும், மக்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, ஜார்ஜ் பெர்னான்டஸ் அமைச்சராக இருந்தபோது இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறி அதை ஏற்க மறுத்தார்கள்.

அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் இந்த முறையை கைவிட்டு விட்டன. வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முன்பு செயல் விளக்கம் செய்து காட்டவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். முறைகேடு செய்ய முடியாது என்பதை விடியோவாக எடுத்து பொதுமக்களுக்கு காட்ட தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறையை கைவிட்டது ஏன் என்பது பற்றி நாம் ஆராய வேண்டும்.

மின்னணு வாக்குப் பதிவு முறையில் அதன் செயல்பாடுகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அச்சந்தேகங்களை தீர்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார் ராமதாஸ்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன். ம.தி.மு.க. சார்பில் நன்மாறன், பா.ஜ.க.சார்பில் பொன்.ராதாகிருஸ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

______________________________________________________________

ஒன்னு செய்றதா சொல்லணும்

இல்லேன்னா சொன்னத செய்யணும்.

அதுவுமில்லைனா வாய மூடிட்டு பேசாம இருக்கணும்.

இப்படி எதுவுமில்லாம சும்மா எப்ப பாரு எதையாவது உளறிகிட்டு இருக்கலாமா?.

நண்பர்களே. நீங்களே சொல்லுங்க….இவருக்கு இதெல்லாம் தேவையா ?

Posted by போவாஸ் | at 12:49 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails