மத்திய இணையமைச்சர்கள் புறக்கணிப்பு: டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மத்திய இணையமைச்சர்கள் புறக்கணிப்பு: டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு :

புதுடெல்லி: நாட்டில் மத்திய இணையமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவையில் கேபினெட் அமைச்சர்களாக இருக்கும் பலரும் தங்களது துறை தொடர்பான பணிகளை, தாங்களே முழுமையாக எடுத்துக்கொள்வதால், அத்துறை இணையமைச்சர்கள் வேலையின்றி பெயரளவுக்கே இணை அமைச்சர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க.வைச்சேர்ந்த பழனி மாணிக்கம் மத்திய நிதித்துறை இணையமைச்சராக உள்ளார். அவரிடம் பிரணாப் முகர்ஜி எந்த கோப்புகளையும் அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று உள்துறை இணைஅமைச்சர் அஜய்மாக்கான், தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் குருதாஸ் காமத் உள்ளிட்ட பெரும்பாலானோர் வேலையின்றி பெயரளவுக்கே அமைச்சர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன், அத்துறையின் இணையமைச்சர் பனபாக இலட்சுமிக்கு எந்த பொறுப்பையும் வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள அவர், காங்கிரஸ் தலைமையிடம் முறையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இணைஅமைச்சர்களாக உள்ள 38 பேரில் பெரும்பாலானவர்களின் நிலை இதுதான் என்றும் தெரிகிறது.

இணையமைச்சர்களை காபினெட் அமைச்சர்கள் புறக்கணிப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்ததாகவும்,

இதையடுத்து, அவர், அமைச்சர்களிடம் பேசி, பணிகளை பகிர்ந்துகொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இணையமைச்சர்களை காபினெட் அமைச்சர்கள் புறக்கணிக்கும் நிலை தொடருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதே நேரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மு.க. அழகிரி உள்பட பல அமைச்சர்கள் தங்களது பணிகளை தங்கள் துறை இணையமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும், அவர்களை மரியாதையுடன் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

நல்லதா இருந்தா பாராட்டுரதுல தப்பே இல்லை.

அழகிரி அண்ணனுக்கு ஒரு ” ஒ “ போடுங்கப்பா.

நன்றி : குமுதம் இணையதளம்.


Posted by போவாஸ் | at 10:58 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails