அ.தி.மு.கவுடன் - தே.மு.தி.க கூட்டணியா ?.
நேற்று தினமலர் இணையத்தில் வெளிவந்த செய்தி : அ.தி.மு.க.,வுடன் இணைந்து ஆட்சி மாற்றம்: ‘தே.மு.தி.க., கட்சி, அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து தமிழகத்தில் தி.மு.க.,வின் அராஜக ஆட்சியை ஒழிக்க பாடுபடும்” என பிரேமலதா விஜயகாந்த் பேசினார். தொண்டாமுத்தூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பேசியதாவது: தொண்டாமுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதற்கான காரணம் யார் என்று அறிந்து, வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டும். போலி அரசியல்வாதிகளை, மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். அ.தி.மு.க., ம.தி.மு.க., வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை இழுத்து விட்டால், மொத்த தமிழகமும் தி.மு.க.,வுக்கு சென்று விட்டதாக அர்த்தமில்லை. தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க., அரசு ஆணவத்தின் உச்சியில் இருக்கிறது. அவர்களுடைய அராஜக ஆட்சியை ஒழிக்க தே.மு.தி.க., கட்சி அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து பாடுபடும். தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களுடைய ஆட்சி ஒழிப்புக்கு பிள்ளையார் சுழி போட வேண்டும்.இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். —————————————- நம்ம உளறல் மன்னன் விஜயகாந்து என்னன்னா….ஒரு பக்கம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் எனக்கு ஒட்டு போடுங்கன்னு கேட்டுகிட்டு இருக்காரு. அ.தி.மு.க கட்சியினரும் எனக்கு ஒட்டு போடுங்கள்னு கூவி கூவி கேட்டுகிட்டு இருக்காரு. இப்போ பிரேமலதா விஜயகாந்து ஒரு படி மேல போயி “தே.மு.தி.க., கட்சி, அ.தி.மு.க., ம.தி.மு.க.,வுடன் இணைந்து தமிழகத்தில் தி.மு.க.,வின் அராஜக ஆட்சியை ஒழிக்க பாடுபடும்” அப்படின்னு பேசியிருக்காரு. உளறல் மன்னனும், மன்னியும் இவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனும் அ.தி.மு.கவோட கூட்டணி வச்சுக்க போறாங்களா?. இல்லை இந்தம்மா அ.தி.மு.கவ கூட்டணிக்கு கூப்பிடுதா?. தே.மு.தி.க - அ.தி.மு.கவுடன் கூட்டணியா ?. இந்த பேச்சு அடுத்து வரப்போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதற்கான பேச்சா ? எப்படியும் இந்த இடைத் தேர்தல் முடிவு வெளியானதும் தெரிஞ்சிடும்னு நினைக்கிறன்… இந்தம்மா இப்படி பேசுனத….நம்ம ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற புலனாய்வுப் பத்திரிக்கைகள் காதில் கேட்காமலா இருந்திருக்கும் ?. அதுல எதுனா மட்டேருங்க வருதானு பார்ப்போம் அம்மா……ஐயா….வருசையில்…..அண்ணியார் வருவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்…..11 Aug 09 அ.தி.மு.கவுடன் - தே.மு.தி.க கூட்டணியா ?.
0 கருத்துக்கள்:
Post a Comment