விஜயகாந்த், எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். Please.

4 Aug 09 விஜயகாந்த், எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். Please.

எம்ஜிஆர் தொண்டர்கள்ஆதரவு தர வேண்டும்: விஜயகாந்த்

First Published : 03 Aug 2009 12:53:24 AM IST
Last Updated : 03 Aug 2009 12:52:18 PM IST
இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் நல்ல கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று
கோவை, ஆக. 2: இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் எம்.ஜி.ஆர். தொண்டர்கள் நல்ல கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அருகே சூலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டாமுத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் தங்கவேலுவை கட்சித் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“பர்கூர் தொகுதியில் ஆளும் கட்சியின் நெருக்குதலால் தேமுதிக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட்டதால் அவரது மனு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கட்சியை சீர்படுத்த கிடைத்த வாய்ப்புதான் தேர்தல். 60 ஆண்டுகளாக இருக்கும் கட்சிகள்கூட தடுமாறுகின்றன. கட்சி துவக்கி 4 ஆண்டுகளே ஆன தேமுதிக தடுமாறுவதில் தவறில்லை.

தேமுதிக கட்சி துவக்கப்படுவதற்கு முன்பு பிற கட்சிகள் தேசிய, மாநில அளவில் அரசியல் செய்து வந்தன. ஆனால், இப்போது வீடுதோறும் அரசியல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால்தான் ஒரு வாக்குக்கு ரூ.500, ரூ.1,000 என மனம்போல பணம் கொடுக்கின்றனர்.

தமிழக அரசு அண்மையில் ஏழைகளுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேமுதிகவின் திட்டம். இந்த யோசனையை முதலில் தெரிவித்தது எங்கள் கட்சிதான். இதுபோல மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்கள் தேமுதிகவிடம் உள்ளன.

தேர்தல் புறக்கணிப்பு:தமிழ் இனம் அழிந்து கொண்டிருப்பதால் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என தேமுதிக யோசனை தெரிவித்தது. தமிழர் நலனுக்காக முன்வைக்கப்பட்ட யோசனை இது.

ஆனால், இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு சுயநலமானது. அதற்காக திமுகவின் அராஜகத்துக்கு தேமுதிக துணைபோகாது. தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து முறையிடுகிறோம்.

தேர்தலை அதிமுகவினர் புறக்கணிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறுவது சரியானதல்ல. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வர முடியவில்லை. எனவே, எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற, அவரது தொண்டர்கள் நல்ல கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா செயல்படுவதுபோல, தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். சட்டப்பேரவைக்கு வராமல் அரசியல் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல.

கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது மூடநம்பிக்கை. ஆனால், அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. விருத்தாசலம் தொகுதியில் “விருத்தகிரி’ என்ற பெயர் பிரபலமானது. எனவே, அந்தப் பெயரில் விரைவில் படம் எடுக்கவுள்ளேன். படத்தின் கதாநாயகன், இயக்குநர் இரண்டு பொறுப்பையும் ஏற்றுள்ளேன்’ என்றார் விஜயகாந்த்

செய்திக்கு நன்றி……..தினமணி நாளிதழ் இணைய தளம்.

தமிழக அரசு அண்மையில் ஏழைகளுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேமுதிகவின் திட்டம். இந்த யோசனையை முதலில் தெரிவித்தது எங்கள் கட்சிதான். இதுபோல மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்கள் தேமுதிகவிடம் உள்ளன.

“ ஒன்னு உங்களோட திட்டங்களை பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அறிவித்து இருக்கணும். அறிவித்து இருந்தால் எங்களுக்கு உங்களது திட்டங்கள், எண்ணங்கள் தெரிந்திருக்கும். அதெல்லாம் பண்ணாம சும்மா எந்த திட்டம் வந்தாலும் எல்லாமே உங்களோட திட்டங்கள்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்.”


சரி இந்த திட்டத்த விடுங்க. இதை போல இன்னும் பல திட்டங்கள் தேமுதிகவிடம் உள்ளன என்றும் சொல்லும் நீங்கள் அந்த திட்டங்களை இப்பொழுதாவது மக்களிடத்தில் சொல்லுங்கள்.


அரசு திட்டங்களை அறிவித்த பின்னர்…..அது என்னுடைய திட்டம், எனது கட்சியின் திட்டம் என்று சொன்னால் யார் நம்புவார்கள் ?????? “


ஆனால், இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு சுயநலமானது. அதற்காக திமுகவின் அராஜகத்துக்கு தேமுதிக துணைபோகாது. தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து முறையிடுகிறோம்.

“கொஞ்ச நாள் முன்னாடி திருப்பூர்ல உங்க கட்சி காரர்….அதும் கட்சில நல்ல பதவில இருந்த ஒருத்தர் போலியான மதுவையும், சாராயத்தையும் தயாரித்து விக்கலையா?….இது அக்கிரமம், அராஜகம் இல்லையா ? இதை பற்றி நீங்கள் ஒரு அறிக்கைக் கூட விடவில்லையே…?

உங்கள் கட்சியில் உள்ளவர்களே ஒழுக்கமில்லாத பொது நீங்கள் மாற்று கட்சியையும், கட்சியினரையும், கட்சித் தலைவர்களையும் பற்றி உங்கள் இஷ்டத்துக்கு பேசுவது நியாயமா படுதா.? அப்படி பேச என்ன தகுதி இருக்கிறது உங்களுக்கு ? ”


தேர்தலை அதிமுகவினர் புறக்கணிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறுவது சரியானதல்ல. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதி ஆட்சிக்கு வர முடியவில்லை. எனவே, எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற, அவரது தொண்டர்கள் நல்ல கட்சிக்கு ஆதரவு தர வேண்டும்.


” அவரே நல்ல கட்சிக்கு அதரவு தர வேண்டும்…என்று சொல்லி விட்ட பின்னர்…கண்டிப்பாக எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் + மக்கள் யாரும் டுபாக்கூர் கட்சியான தே.மு.தி.கவுக்கு வோட்டுகளைப் போடாமல், நல்ல கட்சிக்கு உங்களது பொன்னான வோட்டினைப் போடுங்கள்.


” காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா செயல்படுவதுபோல, தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். சட்டப்பேரவைக்கு வராமல் அரசியல் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல.


” காஷ்மீருல சட்டசபைல மெஹபூபாவும், நம்ம தமிழ்நாட்டுல அம்மா ஜெயலலிதாவும் துணிச்சலா செயல் பட வேண்டும்னு சொல்ரதுஎல்லாம் சரிதான்…. நீங்க எப்போ துணிச்சலா பேச போறீங்க. சட்டசபைல ஒரு நாலாவது உபயோகமா எதாவது பேசியது உண்டா.


“சட்டப்பேரவைக்கு வராமல் அரசியல் நடத்துவது சரியான நடவடிக்கை அல்ல.” என்று பிதற்றித் திரியும் நீங்கள், சட்டசபை கூட்டத்தொடரில் நாள்தவராம போனது உண்டா. எதாவது பேசியது உண்டா. அட சட்டசபைக்கு போய் கைஎளுத்தாவது போட்டது உண்டா. அட அது எங்க இருக்குன்னு உங்களுக்கு தெர்யுமா ? மத்தவங்களை சொல்றதுக்கு முன்னாடி நீங்க உங்களை ஒழுங்கு படுத்திக்கோங்க.


கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற முடியும் என்பது மூடநம்பிக்கை. ஆனால், அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க இயலாது.


இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்க கூட்டணி வைப்பேன்னு சொல்லாம சொல்றீங்கனு எங்களுக்கு தெரியாதா ?.

ஒரு வேலை கட்சியை கலைச்சிட்டு வேறு கட்சியில சேந்தாலும் சேரலாமுன்னு சொல்றீங்களா ?.

விருத்தாசலம் தொகுதியில் “விருத்தகிரி’ என்ற பெயர் பிரபலமானது. எனவே, அந்தப் பெயரில் விரைவில் படம் எடுக்கவுள்ளேன். படத்தின் கதாநாயகன், இயக்குநர் இரண்டு பொறுப்பையும் ஏற்றுள்ளேன்’ என்றார் விஜயகாந்த்.


நீங்க கதாநாயகன், இயக்குனர்னு இரண்டு பொறுப்புகளுடன், நம்ம T.R. மாதிரி , இசை, பாடல்கள், வசனம், கதை, திரை கதை, கேமராமேன் , ஏறக்….. பொறுப்புகளை ஏற்ருக்கொள்ளுங்க.


இதுக்கும் ஒரு படி மேல போய் நீங்களே உங்க படத்துக்கு போஸ்டர்கள் ஒட்டி, ஒரு திற்றேபட்ட லீசுக்கோ, விலைக்கோ அல்லது வாடகைக்கு எடுத்து உங்கள் படத்தை ரிலீஸ் செய்து, நீங்களும் உங்கள் அருமை குடும்ப உறுப்பினர்களும் கழக உறுப்பினர்களும் பாருங்கள்.


தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

Posted by போவாஸ் | at 12:11 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails