மாதக் குழந்தைக்கு கை கொடுத்த ‘கலைஞர்’

09 Aug 09 4 மாதக் குழந்தைக்கு கை கொடுத்த ‘கலைஞர்’

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை செய்து கொள்ள கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் 51 வகையான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 1 லட்சம் வரை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டம் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 4 மாத பெண் குழந்தைக்கு புது வாழ்வு கிடைக்க இருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் துர்காதேவி. குழந்தையின் தந்தை முத்துப்பாண்டியன் இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குழந்தையை மதுரையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறப்பட்டது. அங்கு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முத்துப்பாண்டியன் தனது குழந்தையை கேரளாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுவை சிகிச்சைக்கு 6 மாதத்துக்கு பின் தான் நாள் கிடைத்தது.

இதையடுத்து முத்துபாண்டியன், குழந்தையை கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சேர்த்தார். அங்குள்ள டாக்டர்கள் ரூ. 1 லட்சத்தில அறுவை சிகிச்சை செய்து விடலாம் என கூறியுள்ளனர்.

அப்போது ரூ. 1 லட்சத்துக்கு எங்கே போவது என திகைத்த முத்துப்பாண்டியனுக்கு பத்திரிகைகளில் வெளிவந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கேள்விப்பட்டுள்ளார். உடனே அவர் அது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் தாமஸ் வைத்தியநாதனிடம் உதவுமாறு கேட்டு கொண்டார். அவரும் உதவுவதாக உறுதியளித்து உள்ளார்

Posted by போவாஸ் | at 12:43 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails