அசத்தும் அண்ணன் அழகிரி

4 Aug 09 அசத்தும் அண்ணன் அழகிரி

மதுரையில் ரூ.48,000 கோடியில் “ஏரோ-பார்க்’: மு.க. அழகிரி
First Published : 04 Aug 2009 12:50:00 AM IST

மதுரை, ஆக. 3: மதுரையில் ரூ.48,000 கோடியில் “ஏரோ-பார்க்’ நிறுவப்பட உள்ளது என்று மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்தார்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்பதற்காக மதுரை மக்களவை உறுப்பினர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா மற்றும் ரூ.40.42 லட்சம் மதிப்பில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு அமைச்சர் மு.க.அழகிரி பேசியது:
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

மதுரையில் 10 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது சுமார் ரூ.48 ஆயிரம் கோடியில் “ஏரோ-பார்க்’ என்ற விமானக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பழுது நீக்கும் தொழிற்சாலை அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தொழிற்சாலையில் ஏரோ ஸ்பேஸ் யுனிவர்சிட்டி, கல்லூரி, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன மருத்துவமனை, பொறியியல் பிரிவு, கிரீன் பார்க் உள்ளிட்டவை இடம் பெறும். இந்தத் தொழிற்சாலை அமைந்தால் சுமார் 1 லட்சம் பேருக்கு இப்பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னை சிஐஐ சார்பில் சிறப்புக் குழு, செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வருகிறது.

சென்னையில் அமையவுள்ள சிப்பெட் நிறுவனம் மதுரையில் ஒன்றும் விரைவில் அமைய நடவடிக்கை எடுத்துள்ளேன். மதுரையில் பி.பி.ஓ. அமைப்பதற்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

என்னுடைய துறை மூலமாக தொழிற்சாலைகளை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

நன்றி : தினமணி இணைய நாளிதழ்

Posted by போவாஸ் | at 12:14 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails