மாதங்களில் 10 லட்சம் பேர் வேலையிழப்பு

07 Aug 09 7 மாதங்களில் 10 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்கா: 7 மாதங்களில் 10 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் இந்த ஜூலை மாதம் மட்டுமே 97343 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் இந்த அளவு பணியாளர்கள் நீக்கப்படுவது இதுவே முதல் முறை.

மேலும் அடுத்த காலாண்டிலும் இந்த நிலை தொடரும் என அமெரிக்க புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்தச் செய்தி உலகப் பொருளாதார நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சர்வதேசப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக கருத்து பரப்பப்பட்டு வரும் சூழலில், மீண்டும் பெருந்தொகையிலான வேலையிழப்புகள் நடந்திருப்பது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சற்றே இந்த நிலையில் மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 97343 பணியாளர்கள் பலவேறு நிறுவனங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவரங்களை அமெரிக்க அரசே அரவித்துள்ளது.

அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

2009 ம் வருடம் துவங்கி இந்த 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் பணியிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.

2008 ல் முதல் 7 மாதங்களில் 5,79,260 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இரு ஆண்டுகளிலும் இதுவரை 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில்தான் அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்

Posted by போவாஸ் | at 12:36 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails