இரண்டு வருடங்கள் வீணடித்த விஜயகாந்த்

07 Aug 09 இரண்டு வருடங்கள் வீணடித்த விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்டது.

இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது.

232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள தொகுதிகளில் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது.

கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

11-05-2006 இவர் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்கு எம்.எல்.ஏவாகவும் ஆகிவிட்டார்.

போட்டியிட்டு வென்றதும்தான் வென்றார் அதன் பின்னர்

தொகுதி பக்கம் போனாரா,

மக்களைப் பார்த்தாரா,

குறைகளைக் கேட்டாரா,

குறைகளை நிறைவேற்றினாரா,

தொகுதிக்கு இவர் செய்த வளர்ச்சித் திட்டங்கள் என்னனென்ன,

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு நிதியை வைத்து என்னென்ன செய்தார்….. ?

இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக ஆகி மூன்றரையாண்டு ஆகிவிட்டது.

விருத்தாச்சல தொகுதி பக்கம் போயிருப்பாரா ? என்பதே மிகுந்த சந்தேகம்தான்.

ஏனென்றால், இவர் எம்.எல்.ஏ.வாக ஆனா பின்னர் இவர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படங்கள் மொத்தம் 7.

சரி, திரைப்படத்திற்கும் இவர் தொகுதிக்கும் என்ன சம்மந்தம்.

2006 முதல் தற்போது வரை இவர் நடித்த படங்களின் பட்டியல்

1. பேரரசு

2.சுதேசி

3. தருமபுரி

4. சபரி

5. அரசாங்கம்

6. மரியாதை

7. எங்கள் ஆசான்

ஒரு திரைப்படம் எடுக்க (shooting) சராசரியாக 100 நாட்கள் தேவை என்று வைத்துக் கொள்வோம்.

ஆக ஒரு திரைப்படத்திற்கு இவர் 100 நாட்கள் ஒதுக்கி இருப்பாரென்றால், 2006 முதல் இவர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படங்கள் மொத்தம் ஏழு

இந்த ஏழு திரைப்படங்களுக்கு இவர் கிட்டத்தட்ட 7 x 100 = 700 நாட்கள் ஒதுக்கி இருந்திருக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்.

ஆக 700 நாட்கள் என்பது சரியாக 1 வருடம் 11 மாதங்கள்.

இந்த 700 நாட்கள், தனது திரைப்படங்களுக்காக, நடிப்புக்காக ஒதுக்கிய இவர் எப்படி தொகுதி பக்கம் போயிருப்பார்?

தொகுதி மக்களுக்கு என்ன செய்து இருப்பார்.?

இவர் எம்.எல்.ஏவாகி இதுவரை 3 வருடம் 3 மாதம் ஆகிறது.

இந்த 3 வருடம் 3 மாதத்தில் கிட்டத்தட்ட 2 வருடம் வீணடித்து இருக்கின்றார்.

இவர் வெற்றிபெற்ற தொகுதிக்கும் , இவரை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்களையும் சந்திக்காமல், குறைகளைக் கேட்டு நிறைவு செய்யாமல் 2 வருடம் வீணடித்து இருக்கின்றார்.

இது மட்டுமல்ல, வெளிநாட்டில் ஓய்வு, தேர்தல் பிரச்சாரம் என ஒரு 3 மாதம் வீணடித்து இருக்கின்றார்.

ஆக கூட்டி கழித்து பார்த்தோம் என்று பார்த்தால், உருப்படியான நாட்கள் ஒரே ஒரு வருடம் மட்டுமே.

இந்த 1 வருட கால கட்டங்களிலாவது இவர்,

தனது தொகுதிக்கு அதை செய்தார், இதை செய்தார், இந்த பிரச்சனைக்கு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தினார், உண்ணாவிரதம் இருந்தார், தொகுதிக்கு பல நலத் திட்டங்களைச் செய்தார், ஒரு முன் மாதிரியாக, ஒரு முன் மாதிரி எம்.எல்.ஏவாக செயல்பட்டார்….. அப்படி இப்படி என்று ஏதாவது வந்து செய்திகள்

தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ வந்திருக்கிறதா?

பெரும்பாலும் வந்த செய்திகள் எல்லாம் கலைஞர், தி.மு.க,, தி.மு.கவின் இதர தலைவர்கள், அ.தி.மு.க,, ஜெயலலிதா, பா.ம.க, ராமதாஸ், வைகோ போன்றோரை மூன்றாந்தர பேச்சாளர் ஏசியவைகளாகும்.

மற்றவர்கள் எல்லாம் வேஸ்டாம்.

ஆனால் இவர் மட்டும் ஒழுங்காம்.

எந்த விதத்தில் இவர் ஒழுங்கு என்று இவர்தான் விளக்க வேண்டும்.

ஒரு நல்ல அரசியல்வாதிக்கான குணநலன்கள் துளியும் இவரிடமில்லை.

யாரை, எங்கே, எப்படி, என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை.

ஒரு சராசரி மனிதனுக்கு உள்ள, தெரிந்த நாகரிகங்கள் கூட இந்தக் கட்சி தலைவருக்கு தெரியவில்லையா?.

இவர் ஒரு தரங்கெட்ட அரசியவாதியை போலவும், மூன்றாம்தர பேச்சாளரை போல சென்ற இடமெல்லாம் பிதற்றுகிறார்.

இவர் உண்மையான அரசியல்வாதியாக இருந்தால்,

தனக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு நன்மைகள் செய்து இருந்தால்,

அதையெல்லாம் பட்டியல் இடுவாரா?

நன்மைகளை மட்டுமே செய்ய வந்திருக்கின்ற இந்த உத்தம அவதார அரசியல்வாதி என்னென்ன உதவிகள், நன்மைகள் செய்தார் என்று பட்டியல் இடுவாரா?.

நமது கேள்விகளுக்கு விஜயகாந்த் விளக்கமளிப்பாரா ????.

Posted by போவாஸ் | at 12:36 PM

3 கருத்துக்கள்:

Anonymous said...

Too much. Dont excpect too mcuh from politicians.

சித்து said...

என்னங்க இது?? கேப்டன் தான் புள்ளி விபர புலி நீங்க அவர பத்தியே புள்ளி விபரம் சொல்றீங்க?? இருந்தாலும் நீங்க ரொம்ப எதிர்பார்கறீங்க.

Anonymous said...

மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் போலவும்...விஜயகாந்த் மட்டும் கெட்டவர் போலவும் எழுதுகீறீர்கள்??

Post a Comment

Related Posts with Thumbnails